அமைச்சரின் உடல்நிலை சீராக உள்ளது- மருத்துவமனை நிர்வாகம் தகவல்
தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 6ம் தேதி மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காத நிலையில், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அரசு மருத்துவமனையில் இருந்து எம்.ஜி.எம் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எம்.ஜி.எம் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக உடல்நலம் மிகவும் மோசமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், அமைச்சர் காமராஜின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவரின், இரத்தத்தில் உள்ள ஆக்சிஜனின் அளவு அதிகரித்து இருப்பதால், அமைச்சர் காமராஜ் உடல்நிலை இயல்புநிலைக்கு திரும்பி இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.