பள்ளிக்கல்விக்கு காமராஜர் என்றால் உயர்க்கல்விக்கு கலைஞர் : முதலமைச்சர் ஸ்டாலின்

M K Stalin
By Irumporai May 17, 2022 08:34 AM GMT
Report

சென்னை அடுத்த பையனூரில் தனியார் பல்கலைக்கழக கட்டிட திறப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த விழாவில் கவுரவ விருந்தினராக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்றுள்ளார்.

அப்ப்போது நிகழ்ழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் :

உயர்கல்வியில் திமுக அரசு மிகுந்த கவனத்தை செலுத்தி வருகிறது. உயர்க்கல்வியில் கவனம் செலுத்துவதன் காரணமாகத்தான் அன்று கலைஞர் ஆட்சியில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

நுழைவுத் தேர்வை ரத்து செய்ததுடன் அதற்கு சுப்ரீம் கோர்ட்டு அங்கீகாரத்தை பெற்றுத் தந்தவர் கலைஞர். பள்ளிக்கல்விக்கு காமராஜர் என்றால் உயர்க்கல்விக்கு கலைஞர். உயர்க்கல்விக்கு தற்போதையை திமுக ஆட்சி பொற்காலமாக இருக்கும் என்று நான் குறிப்பிட்டுள்ளேன்.

உலகிலேயே திறமையான மாணவர்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள் என்ற நிலையை உருவாக்க உறுதி பூண்டுள்ளோம். சாதனை மாணவர்களாக தமிழக இளைஞர்களை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டது தான் நான் முதல்வன் திட்டம் எனக் கூறினார்.