"உங்களை எண்ணி பெருமை கொள்கிறோம்"- சச்சின்

இந்த அனுபவம் உங்களை பலமான தடகள வீராங்கனையாக வரும் நாட்களில் உருவாக்கும்” என கமல்ப்ரீத்க்கு, சச்சின் டெண்டுல்கர் ஊக்கம் கொடுத்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் வட்டெறிதல் இறுதிப் போட்டியில் ஆறாவது இடம் பிடித்துள்ளார் இந்திய வீராங்கனை கமல்ப்ரீத் கவுர். இந்நிலையில் அவரை பாராட்டி சமூக வலைத்தளத்தில் அதனை பகிர்ந்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர்.

“சில சமயங்களில் நாம் வெற்றி பெறுவோம். சில சமயங்களில் நாம் ஆட்டத்திலிருந்து பாடங்களை கற்போம். இந்தியாவுக்காக மாபெரும் சபைதனில் பங்கேற்றதோடு, சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்திய உங்களை எண்ணி பெருமை கொள்கிறோம். இந்த அனுபவம் உங்களை பலமான தடகள வீராங்கனையாக வரும் நாட்களில் உருவாக்கும்” என தெரிவித்துள்ளார் சச்சின். இறுதி போட்டியில் 63.70 மீட்டர் தூரம் வத்தை எறிந்திருந்தார் கமல்ப்ரீத்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்