கோவை தெற்கில் என்ன நடக்கிறது? டிரெண்டாகும் கமல்ஹாசன்

By Fathima May 02, 2021 03:22 PM GMT
Report

பிரபல திரைப்பட நடிகரான கமல்ஹாசன் தன்னுடைய தொகுதியில் 192 வாக்குகளுடன் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்து 234 தொகுதிகளிலும் களம்கண்டது.

இதில் மற்ற மாவட்டங்களில் மக்கள் நீதி மய்யம் அந்தளவிற்கு போதுமான வாக்குகளைப் பெறவில்லை என்றாலும், கமல்ஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு பகுதி பரபரப்பின் விளிம்பில் உள்ளது.

இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மற்றும் கமலுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இதில் இரவு 8.15 மணி நிலவரப்படி கமல் 1874 வாக்குகள் பெற்று முன்னிலை வகிப்பதாகவும், இன்னும் 7 சுற்றுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பது எல்லாம் தெரிந்துவிட்டது. இருப்பினும் இப்போது ஒட்டு மொத்த தமிழகத்தின் பார்வையும் கோவை தெற்கு மீது தான் விழுந்துள்ளது.

அதுமட்டுமின்றி இணையவாசிகள் பலரும் கமல் வெற்றி பெற வேண்டும் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.