இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு கொதிக்குதடா நெஞ்சம் : கொதித்தெழுந்த கமல்

neet kamalhassan
By Irumporai Sep 14, 2021 09:39 AM GMT
Report

தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக தனுஷ், கனிமொழி என இரு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பாக, கமல்ஹாசன் தனது ட்விட்டர்பதிவில் : ஜெய்ப்பூரில் 35 லட்சம் ரூபாய்க்கு நீட் தேர்வின் வினாத்தாள்கள் விநியோகமாகிக் கொண்டிருக்க இங்கே தனுஷ், கனிமொழி போன்ற அப்பாவி மாணவர்கள் தங்கள் இன்னுயிரை நீத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு, இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு. சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்" எனப் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் மாணவி கனிமொழியுடன் சேர்த்து நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. நீட் விலக்கு மசோதா நேற்றைய தினம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.