கோவை தெற்கில் கமல்ஹாசன் முன்னிலை! பாஜகவுக்கு பின்னடைவு
கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால், பாஜக வேட்பாளரான வானதி சீனிவாசன் பின்னடைவை சந்தித்து வருகிறார்.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் தற்போது முன்னிலை விவரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
சற்று முன் வெளியான தகவலின்படி திமுக கூட்டணி 68 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 45 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
நட்சத்திர தொகுதி என்று அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் முன்னிலை வகித்து வருகிறார். அவரை அடுத்து காங்கிரஸ் கட்சியின் மயூரா ஜெயக்குமார் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
பாஜகவின் வேட்பாளர் வானதி சீனிவாசன் தற்போதைய நிலையில் மூன்றாவது இடத்தில் தான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.