மிக்ஜாம் புயல்: சர்ச்சையை கிளப்பிய கமல்ஹாசனின் பதிவு
சென்னை வெள்ளம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பதிவிட்டுள்ள X தள பதிவு சர்ச்சையாகியுள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்த நிலையில் மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னை மழைநீர் வடிகால் பணிகளுக்காக அரசு ஒதுக்கிய 4 ஆயிரம் கோடி ரூபாய் என்ன ஆனது அரசியல் கட்சிகள் உட்பட பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் X தளத்தில், அரசு எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டாலும் இயற்கைச் சீற்றங்களின் விளைவுகளை ஓர் எல்லை வரைதான் கட்டுப்படுத்த முடியும்.
இந்தத் தருணத்தில் நமது பாதுகாப்பை உறுதி செய்துகொண்டு, அரசு இயந்திரத்தோடு கைகோர்த்து செயல்பட்டு நிலைமை சீரடைய உதவ வேண்டியது அவசியம்.
மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யும்படி மக்கள் நீதி மய்ய உறவுகளை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என கூறி இருந்தார்.
அரசு எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டாலும் இயற்கைச் சீற்றங்களின் விளைவுகளை ஓர் எல்லை வரைதான் கட்டுப்படுத்த முடியும்.
இந்தத் தருணத்தில் நமது பாதுகாப்பை உறுதி செய்துகொண்டு, அரசு இயந்திரத்தோடு கைகோர்த்து செயல்பட்டு நிலைமை சீரடைய உதவ வேண்டியது அவசியம். #CycloneMichuang என பதிவிட்டிருந்தார்.
அரசு எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டாலும் இயற்கைச் சீற்றங்களின் விளைவுகளை ஓர் எல்லை வரைதான் கட்டுப்படுத்த முடியும். இந்தத் தருணத்தில் நமது பாதுகாப்பை உறுதி செய்துகொண்டு, அரசு இயந்திரத்தோடு கைகோர்த்து செயல்பட்டு நிலைமை சீரடைய உதவ வேண்டியது அவசியம். #CycloneMichuang…
— Kamal Haasan (@ikamalhaasan) December 4, 2023
இந்நிலையில் சென்னை மழை தொடர்பாக கடந்த 2020ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடிகர் கமல்ஹாசன் பதிவிட்ட பதிவை சுட்டிக்காட்டி, அதிமுக மற்றும் பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு, “ஒரு மணி நேர மழை. தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை. வடகிழக்குப் பருவமழை வரட்டுமா என்று மிரட்டுகிறது.
கருணை மழையைச் சேகரிக்க நீர் நிலைகள் தயார் செய்யப்படவில்லை. கடந்த வெள்ளத்தில் கற்ற பாடமென ஏதுமில்லை. வடிகால்கள் வாரப்படவில்லை.குழந்தைகள் மருத்துவமனையிலும் நீர் புகுவது குறையவில்லை.
கரையோர மாவட்டங்கள் மேல் கடைக்கண்ணாவது வையுங்கள்” என பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.