மக்கள் நீதி மய்ய கட்சியிலிருந்து கமீலா நாசர் நீக்கம்: காரணம் என்ன?
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து கமீலா நாசர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து, அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்து வந்தவர் நாசரின் மனைவி கமீலா நாசர்
இவர், கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை மக்கள் நீதி மய்யம் வேட்பாளராகவும் களமிறங்கி தோல்வியடைந்தார்.
ஆனாலும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை மண்டலத்தின் மாநிலச் செயலாளராக இருந்து வந்த கமீலா நாசர் திடீரென கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் கமீலா நாசர் தனிப்பட்ட காரணங்களால் தனது பதவியை ராஜினாமா செய்தாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கமீலா நாசரை விடுவிப்பதாக மநீம கட்சியின் பொதுச் செயலாளர் சந்தோஷ் பாபு தெரிவித்துள்ளார்.