கொரோனாவுடன் பசி பட்டினியும் இணைந்து விடும்..! கமல் அதிரடி..!

kamalhasan statement MNM party
By Anupriyamkumaresan May 29, 2021 02:10 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

சிறு, குறு நடுத்தர தொழில்களை காக்க, விரைவான நடவடிக்கையை, அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால், கொரோனா உடன் பசி, பட்டினி கொடுமையும் இணைந்து விடும்' என, கமல் கூறியுள்ளார். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யக் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தொழில் துறையை பாதுகாக்க, மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் சோப், கிருமி நாசினி தயாரிப்பில் ஈடுபடுவோரை அத்தியாவசிய பொருள் தயாரிப்பவர்களாக அங்கீகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், மத்திய, மாநில அரசிடம் இருந்து உதவி கிடைக்காவிட்டால், தொழில் நிறுவனங்களை மூடும் நிலை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார். இதனால்,.சிறு, குறு, நடுத்தர தொழில்களை காக்க, விரைவான நடவடிக்கையை, அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும், இல்லையென்றால், கொரோனா உடன் பசி, பட்டினி கொடுமையும் இணைந்து விடும் என கூறியுள்ளார்.

கொரோனாவுடன் பசி பட்டினியும் இணைந்து விடும்..! கமல் அதிரடி..! | Kamalhasan Mnm Statenent