கட்சியில் செயல்படாத நிர்வாகிகளை நீக்கிவிடுங்கள் - ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் உத்தரவு!

Kamal Haasan Tamil nadu Makkal Needhi Maiam
By Jiyath Jan 23, 2024 11:03 AM GMT
Report

கட்சியில் செயல்படாத நிர்வாகிகளை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்ய வேண்டும் என்று ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் உத்தரவிட்டுள்ளார்.

கமல்ஹாசன் 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.

கட்சியில் செயல்படாத நிர்வாகிகளை நீக்கிவிடுங்கள் - ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் உத்தரவு! | Kamalhasan Consult With Party Leaders Chennai

இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு, நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

உத்தரவு 

அப்போது பேசிய அவர் "கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன், தேர்தல் பணிகளை நீங்கள் மேற்கொள்ளுங்கள். கூட்டணி அமைத்தாலும் அனைத்து பூத்களிலும் மக்கள் நீதி மய்யம் சார்பில் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு நிர்வாகிகள் இருக்க வேண்டும்.

கட்சியில் செயல்படாத நிர்வாகிகளை நீக்கிவிடுங்கள் - ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் உத்தரவு! | Kamalhasan Consult With Party Leaders Chennai

கட்சியில் செயல்படாத நிர்வாகிகளை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்ய வேண்டும்" என்று கூறினார். மேலும், கட்சியின் தலைவராக, தான் என்ன செய்ய வேண்டும் எனவும் நிர்வாகிகளிடம் கருத்துக்கேட்டுள்ளார் கமல்ஹாசன்.