திருமணம் வேண்டாம்; லிவிங் ரிலேசன்ஷிப் போதும் - பிரபல நடிகையிடம் கேட்ட கமல்!
திருமணம் வேண்டாம் லிவிங்கில் இருக்கலாம் என கமல்ஹாசன் பிரபல நடிகையிடம் கேட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.
கமல்ஹாசன்
தமிழ் திரையுலகில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருபவர் நடிகர் கமல் ஹாசன். ரொமாண்டிக் ஹீரோவாக வலம்வந்தவர். அந்த காலக்கட்டத்தில் பல நடிகைகளுடன் கமல் கிசுகிசுக்கப்பட்டார்.
அந்த சமயத்தில் தான் நடிகை வாணி கணபதி என்பவருடன் காதல் வயப்பட்டார். ஆனால் கமல் ஹாசனுக்கு வாணியை திருமணம் செய்ய விருப்பமில்லையாம். அவருடன் லிவிங் டுகெதரில் இருக்கவே ஆசைப்பட்டாராம்.
லிவிங்
அந்த சமயத்தில் பாலசந்தர் இது போன்று இருக்க கூடாது, அப்படி இருந்தால் உன்னுடைய கேரியர் அழிந்துவிடும் என்று கமலிடம் சொல்லி வாணியை திருமணம் செய்ய சம்மதிக்க வைத்ததாக தெரியவந்துள்ளது.
அதன்பின், 978ஆம் ஆண்டு கமல் வாணி கணபதியைத் திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் அவரை சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.