நான் CM ஆக அரசியலுக்கு வரவில்லை; நானே பிட்டு தான் - மனம் திறந்த கமல்ஹாசன்
அரசியலுக்கு வந்த காரணம் குறித்து கமல்ஹாசன் பேசியுள்ளார்.
தக் லைப் இசை வெளியீட்டு விழா
மணி ரத்னம் இயக்கத்தில் கமல், சிலம்பரசன், அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஆகியோர் நடிப்பில் உருவான தக் லைப் திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் திகதி திரைக்கு வர உள்ளது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான அரசியலுக்கு வந்த காரணம் குறித்து பேசியுள்ளார்.
அரசியலுக்கு வர காரணம்
இதில் பேசிய அவர், "நான் இதுவரை 233 படங்கள் நடித்திருக்கிறேன். அதில் நான் படம் எடுக்கும்போது மட்டும்தான் நிறைய கஷ்டங்களை சந்தித்திருக்கிறேன். அதில் நான் நிறைய மறந்திருக்கிறேன். காரணம் இந்த வன்மத்தை எல்லாம் எனக்கு கேட்காமல் உங்களுடைய ஆதரவும் ஆரவாரமும் தான் என்னை தூக்கிவிட்டது கண்ணீரை துடைத்துவிட்டது தான் உண்மை.
விஸ்வரூபம் பிரச்னையின்போது எல்டாம்ஸ் ரோட்டில் நின்றவர்களில் நானும் ஒருவன் என்று அசோக் செல்வன் கூறியது போல, என்னுடன் இருந்த பல ரசிகர்களை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியாது. அவர்களுக்கு எல்லாம் நான் எப்படி நன்றி சொல்வது? அதற்காகவே நான் அரசியலுக்கு வந்தேன்.
நான் முதல்வர் ஆவதற்கு அரசியலுக்கு வரவில்லை. எம்.எல்.ஏ, எம்.பி எல்லாம் எனக்கு புரியாது. ஆனால் 40 வருடங்களாக ஒரு எம்.எல்.ஏ ஒரு தொகுதிக்காக என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் பொறுமையாக செய்து வருகிறோம்.
ஏனென்றால் நாங்கள் தனி மனிதர்கள். இங்கு இருந்து என்னுடன் உழைத்த தம்பிகள் எல்லாம் இன்று சமுதாயத்தில் பெரிய மனிதர்களாக மாறியிருக்கிறார்கள். அதேபோல, உங்களுடைய தம்பிகளும் இருக்க வேண்டும், STR! நான் பேசுற எல்லாமே காப்பி அடிச்சதுதான். அபிராமியைப் பார்த்து, 'பிட்டு அடிக்குறீங்களா?'ன்னு மணிரத்னம் கேட்டார்.
நானே பிட்டு தான். அதுவும் பள்ளிக்கூடத்துக்கே போகாத பையன், ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டுக்குப் போகாத பையன், பிட்டு அடிக்காம வேற என்ன பண்ணுவான்? இப்படி பிட்டு அடிச்சி அடிச்சி, டாக்டர் பட்டமே கொடுத்துட்டாங்க" என பேசியுள்ளார்.