அரசியல் என்றால் சமரசங்கள் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது : மனம் திறந்த கமல்ஹாசன்
எழும்பூரில் அமைக்கப்பட்டுள்ள இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பதிப்பக புத்தக நிலையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் அதனை திறந்து வைத்தார்.
நீலமும் மய்யமும் ஒன்று
அப்போது நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன் அரசியலையும் கலாச்சாரத்தையும் தனித்தனியே வைக்க வேண்டிய அவசியத்தில் இருக்கின்றோம் நாம் பேசுவதுதான் அரசியல் எனது அரசியல் பயணம் 21 வயதில் தொடங்கியதக கூறிய கமல்ஹாசன் அரசியலில் இருந்து சாதியை ஒழிக்கும் போராட்டம் இன்று நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் ஆக நீலமும் மய்யமும் ஒன்றுதான் எனக் கூறினார்.
சமரசம் அரசியல்
மேலும், அரசியல்வாதியாகிய பிறகு சில சமரசங்கள் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது என்று கூறிய அவர், ரஞ்சித்திற்கும் அவர் நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள். தடங்கல்கள் நிறைய வரும். ஆனால் அவற்றை மீறி பயணிக்க வேண்டும் என்று கமல்ஹாசன் பேசினார்.