மாநிலங்களவை எம்.பி ஆகும் கமல்ஹாசன் - திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
தமிழ்நாடு சார்பில் மாநிலங்களவை எம்.பி.க்களாக உள்ள வைகோ, அன்புமணி, பி.வில்சன், எம்.சண்முகம், என்.சந்திரசேகரன், எம்.முகமது அப்துல்லா ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 27 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்த 6 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தல், வரும் ஜூன் 19ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதில், திமுக சார்பில் 4 எம்.பிக்களை தேர்வு செய்ய முடியும். இந்நிலையில், திமுக மாநிலங்களவைக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
மக்கள் நீதி மைய்ய தலைவர் கமல்ஹாசன், பி.வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலின் போதே, மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களை பதவி தருவதாக திமுக சார்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அதனடிப்படையில், அவர் பெயர் இடம்பெற்றுள்ளது.
ஏற்கனவே மாநிலங்களவை எம்.பியாக இருந்த பி.வில்சன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுக மற்றும் தமிழக அரசு சார்பில், உச்சநீதிமன்ற வழக்குகளை வில்சன் திறம்பட கையாண்டு வருவதால், அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.