அமெரிக்க அதிபரான கமலா ஹாரிஸ் - ஜோ பைடனுக்கு என்ன ஆச்சு தெரியுமா?
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் அமெரிக்க அதிபருக்கான அதிகாரம் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாக குடல் பகுதியில் ஏற்பட்ட உடல்நலக்கோளாறால் பாதிக்கப்பட்டு வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதற்காக சிகிச்சையும், பரிசோதனைகளையும் அவ்வப்போது செய்துக் கொள்வது வழக்கம்.
79 வயதான அவர் கடந்த ஜனவரியில் அதிபராக பதவி ஏற்றபின் குடல் பரிசோதனை செய்யவில்லை. இதையடுத்து இன்று மருத்துவமனையில் பைடன் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ சோதனைகளுக்காக அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. மயக்க நிலையில் இருப்பதால் சட்டப்படி சிகிச்சை முடிந்து மருத்துவர்கள் சான்று அளிக்கும் வரை ஜோ பைடன் அதிபராக இருக்க முடியாது.
அமெரிக்க விதிகளின்படி அதிபர் பதவியை வகிக்க உடல் ரீதியாகவும் தகுதியாக இருக்க வேண்டும். சுயநினைவோடு இருக்க வேண்டும். இதனால் அவர் மருத்துவமனையில் இருந்து திரும்பும் வரை அதிபருக்கான பவர் தானாக துணை அதிபருக்கு சென்றுவிடும்.
இதனால் அமெரிக்க அதிபருக்கான அதிகாரம் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறுகிய கால பதவி என்ற போதிலும் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் கமலா ஹாரிஸ் என்றும் கூட சொல்லலாம். இவர் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.