கமலா ஹாரிசை கொல்ல சதியா.? கொலை ஆயுதங்களுடன் கைதான நபரால் அமெரிக்காவில் பரபரப்பு

Kamala Harris usa kill weapon
By Jon Mar 18, 2021 12:14 PM GMT
Report

கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் டொனால்ட் ட்ரம்ப்பை வீழ்த்தி ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றனர். ஆனால் ட்ரம்ப் தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்து பல்வேறு சதி வேலைகளில் ஈடுபட்டார். அதன் உச்சகட்டமாக அவருடைய ஆதரவாளர்கள் ஜனவரி 6-ம் தேதி அன்று அமெரிகக் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டனர்.

இவ்வளவு தடைகளையும் தாண்டி ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபராக பதவியேற்றனர். எனினும் ஜனவரி 6-ம் தேதி வன்முறையைத் தொடர்ந்து உள்நாட்டில் பல வன்முறைகள் நிகழக்கூடும் என சிஐஏ எச்சரித்திருந்தது. ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிசுக்கான பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது கமலா ஹாரிசை கொல்வதற்கு முயற்சிகள் நடப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. கமலா ஹாரிஸின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வெளியே கொலை ஆயுதங்களுடன் மர்ம நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த செய்தியை அமெரிக்க இரகசிய பாதுகாப்பு படை உறுதி செய்துள்ளது.

31 வயதான அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தன்னுடைய வெற்றியை ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் திருடிவிட்டனர் என ட்ரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில் அமெரிக்காவில் உள்நாட்டு வன்முறை அதிகரிக்கக்கூடும் என உளவுத்துறை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.