அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பதவியேற்றார் கமலா ஹாரிஸ்
அமெரிக்காவின் துணை அதிபராக இந்தியா வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவியேற்றார். அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்றார் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ். அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
வாஷிங்டனில் பதவியேற்பின் போது, அமெரிக்க துணை அதிபரின் பணியை நான் உண்மையாக நிறைவேற்றுவேன் என கமலா ஹாரிஸ் உறுதியேற்றார். அத்துடன், அமெரிக்க அரசமைப்பை பாதுகாக்க தன்னால் முடிந்தவரை சிறப்பாக செயல்படுவேன் என தன்னுடைய உறுதிமொழி ஏற்பில் கமலா ஹாரிஸ் கூறினார்.
தலைநகர் வாஷிங்டனில், அமெரிக்க நாடாளுமன்றம் கூடும் கேப்பிடல் கட்டடத்துக்கு முன்பு விழா நடைபெற்றது. இந்திய நேரப்படி இன்று இரவு பத்து மணிக்கு இவர் பதவி ஏற்றுக்கொண்டார்.