கமலின் அழைப்பை இழிவுபடுத்திய திருமாவளவன்
வெற்றிக் கூட்டணி அமைப்பதற்கும் தோல்வி கூட்டணி அமைவதற்கும் வித்தியாசம் உள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
''வெற்றி கூட்டணியில், ஆறு தொகுதிகள் பெறுவதற்கும், தோல்வி கூட்டணியில், 25 தொகுதிகள் பெறுவதற்கும் வேறுபாடுகள் உள்ளன,'' என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலுக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.
அவரது பேட்டியில் அவர் தெரிவித்ததாவது, தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட, பா.ஜ.,வால், 10 ஆயிரம் ஓட்டுகள் வாங்க முடியாது. பா.ஜ., போட்டியிடும், 20 தொகுதிகளில், தி.மு.க., கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. கூட்டணிக்கு வரும்படி, எனக்கு கமல் அழைப்பு விடுத்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மீதும், என் மீதும், அவர் வைத்திருக்கும் எண்ணத்திற்கு நன்றி.
ஆனால், வெற்றி கூட்டணியில், ஆறு தொகுதிகள் பெறுவதற்கும், தோல்வி கூட்டணியில், 25 தொகுதிகள் பெறுவதற்கும் வேறுபாடுகள் உள்ளன.