கமல்ஹாசன் தலைமையில் மூன்றாவது அணி: யாருக்கு எத்தனை தொகுதிகள்?
election
tamilnadu
mnm
By Jon
தமிழக சட்டசபை தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ரவி பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி 154 இடங்களிலும், சமக மற்றும் ஐஜேகே ஆகியவை தலா 40 இடங்களில் போட்டியிட உள்ளன.
இதற்கான ஒப்பந்தம் சென்னையில் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் பொது செயலாளர் குமரவேல், சமக சார்பில் சரத்குமாரும், ஐஜேகே சார்பில் ரவி பச்சமுத்துவும் கையெழுத்திட்டனர்.