ஒவ்வொரு தமிழனையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்: கமல்ஹாசன் கோரிக்கை

tamil people kamal request
By Jon Mar 12, 2021 04:03 PM GMT
Report

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே மக்கள் வெளியிடங்களில் முகக்கவசத்தை அணியுமாறும், சமூக இடைவெளியை பின்பற்றுமாறும் சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.

மேலும் கொரோனா விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழகத்தில் கடந்த 16 நாட்களில் கோவிட் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52% உயர்ந்துள்ளது.

தேர்தல் ஆரவாரங்களில் அமுங்கி விடக்கூடாத அபாய எச்சரிக்கை இது. இந்த வேகத்தில் நோய் பரவுவது பேராபத்து. சகல முன்னெச்சரிக்கைகளையும் கடைப்பிடிக்குமாறு ஒவ்வொரு தமிழரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.