ரேகாவுக்கே தெரியாமல் அந்த இடத்தில் முத்தம் கொடுத்த கமல் - உண்மை உடைத்த நடிகர்!
கமல் ரேகாவிற்கு முத்தமிட்டது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன்
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை உருவாக்கிக் கொண்டவர் உலகநாயகன். இவர் பல கதாபாத்திரங்களில் பன்முகங்களில் நடித்து மக்களை கவர்ந்தவர். இவர் திற்பொழுது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இவர் 90sகளில் நடித்த எல்லோருக்கும் பிடித்த நடிகர் ஆவார். அந்த சமயங்களில் இவர் நடிகை சிம்ரனுடன் இனைந்து பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
வெளியான தகவல்
இந்நிலையில், கமல்ஹாசன் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் அவர் நடிகை ரேகாவுடன் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார். கே பாலச்சந்தர் கூட்டணியில் 1986ம் ஆண்டு வெளியான திரைப்படம் புன்னகை மன்னன். கமலுடன் ரேவதி நடித்துள்ளார்.
அந்த படத்தில் ஹிட்டான காட்சி ஒன்று குறித்து அவர் கூறுகையில், "அருவியில் இருந்து குதிக்கும் காட்சியில் ரேகாவை கண்களை மூட வேண்டும் என சொல்லிவிடுகிறேன். அப்போது நீ (கமல்) ரேகாவின் உதட்டில் முத்தம் கொடுத்துவிடு" என்று இயக்குனர் கூறினார். ஆனால், ரேகாவுக்கு அப்போது ரொம்பவே இளம் வயது என்பதால் கமல் முதலில் பயந்துள்ளார். ஆனால், கே பாலச்சந்தர் அவரை விடாமல் துரத்தியதோடு, "எல்லாம் ஒரு 30 செகண்ட்ல முடிச்சுடுடா" என்று கூறினார்.
பிளான் செய்தது எதுவும் தெரியாமல் ரேகா கண்களை மூட, கமல் காரியத்தை கச்சிதமாக முடித்துவிட்டாராம். ரேகாவுக்கு என்ன நடந்தது என்றே தெரியாமல் திருதிருவென முழித்துள்ளார். இதனை கமல் சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.