கமலா.. சரத்குமாரா.. மூன்றாவது அணியின் முதல்வர் வேட்பாளர் யார்?
கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக ஏற்று மக்கள் நீதி மய்யத்துடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைக்கிறது என சரத்குமார் அறிவித்திருக்கிறார். தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் சரத்குமார் பேசுகையில், மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ஐ.ஜே.கே. கூட்டணி உறுதியாகி இருக்கிறது.
எங்கள் கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன் தான் என சரத்குமார் அறிவித்திருக்கிறார். மக்கள் நீதி மய்யத்துடன், சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி நேற்று இரவு உறுதியானது.
அப்போது பேசிய சரத் குமார், “மக்கள் விரும்பும் கூட்டணியாக எங்கள் கூட்டணி இருக்கும். மக்களுக்காக சிந்திக்க வேண்டும். ஓட்டுக்காக சிந்திக்க கூடாது. சமத்துவம் இல்லையென்றால் நாடு வீணாய் போகும்” என்றார்.

கடந்த வாரம் கமலை சந்தித்து கூட்டணி குறித்து சரத்குமார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தற்போது கூட்டணி உறுதியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.