''நான் தனி மரம் இல்லை தோப்பு" கோபம் கொப்பளிக்க வீடியோ வெளியிட்ட கமல்ஹாசன்!

video election kamal gandhi mnm
By Jon Mar 24, 2021 06:29 PM GMT
Report

  ஒரு பக்கம் களத்தில் தேர்தல் பிரச்சாரம் இன்னொரு பக்கம் சோசியல் மீடியாவில் ஐடி விங்கின் பிரச்சாரம் என தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் கட்சிகள் மிகத் தீவிரமாக இயங்கி வருகின்றன. அந்த வகையில் கமல்ஹாசன் தமிழகத்தின் மக்கள் நீதி மய்யத்திற்கான தேர்தல் பிரச்சார வீடியோவை தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

காந்தி சிலை முன்பு குறை: அந்த வீடியோ பதிவில் காந்தி இப்போது உயிரோடு இருந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருப்பார் என நினைக்கிறீர்களா. பெட்ரோல் விலை எப்படி ஏறி உள்ளது தெரியுமா. அவர்களுக்கு புரியும் வகையில் சொல்ல வேண்டும் என்றால், டங் டனா டன் என்று விலை ஏறிக்கொண்டே இருக்கிறது.

இவரைப்போல தெருவில் இறங்கி சத்யாகிரகம் செய்யலாம் என்றால்.ரோடு குண்டும் குழியுமாக இருக்கிறது. தேர்தலுக்காக போடப்பட்ட ஊழல் ரோடுகள்தான் அவை, என கமல்ஹாசன் ஆவேசமாக கூறுகிறார். தொடர்ந்து பேசும் கமல்ஹாசன் , ஊழல் தொலையுது விடுங்கள். அம்பேத்கர் கொடுத்த அரசியலமைப்பு சட்டம் நம்மை காப்பாற்றும்.

அந்த பலத்தில் நாம் வாழ்ந்து விடலாம் என்று நினைத்தால் மேலே இருந்து என்ன மொழி பேச வேண்டும்.. என்ன சாப்பிட வேண்டும் என்று சொல்கிறார். என்ன சிந்திக்க வேண்டும் என்று சொல்கிறார். இந்த தேசத்தை எப்படி நேசிக்க வேண்டும் என்று அவர் சொல்லிக் கொடுக்கிறார். தலைவாசல் இதுதான்:

இவ்வாறு கமல்ஹாசன்பேசும் போது திடீரென்று கோபமாக ‘‘யோவ் உன்னோட ஊர் மேப்பில் மேலே இருக்கிறது என்பதால் அது தான் மேலிடம் என்று நினைத்து விடாதே நீ இங்கே இருந்து பார் இதுதான் தலைவாசல்" என தொடர்ந்து பேசும் கமல்ஹாசன் இங்கே இருந்து ஒரு ஆள் சென்று பேசுவார் என்று எதிர்பார்த்தால் அங்கே சென்று கையைக் கட்டிக் கொண்டு நிற்கிறார் இந்த ஆள்.

இதில் சைரன் வேறு. என அவர் சொல்லும்போது திடீரென மின் விளக்கு அனைகின்றது நான் தனி மரம் இல்லை தோப்பு : இந்த இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு வர வேண்டும் என்றால் ஒரே ஒரு வழிதான் இருக்கிறது என்று கூறும் கமல்ஹாசன் தனது கட்சி சின்னமான டார்ச் லைட்டை கையில் எடுக்கிறார். திரையை நோக்கி காட்டுகிறார்.

என்னடா இது ஒரு டார்ச்லைட் எப்படி வெளிச்சத்தை கொண்டு வரப் போகும் என்று பார்க்கிறீர்களா.. எனக் கூறும் கமல்ஹாசன் நான் தனி மரம் இல்லை தோப்பு எனத் தெரிவிக்க பல ஆயிரம் பேர் டார்ச் லைட் வெளிச்சத்தை பீய்ச்சி அடிப்பது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது திரைப்பட பாணியில் ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவுபடுத்துவது போல கமலின் பிரச்சார வீடியோ இருப்பதாக அவரின் ரசிகர்களின் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழகத்தின் ஆண்ட கட்சிகளை தாக்கிப் பேசும் அதே வேகத்தில் பிரதமர் மோடியையும் குஜராத்தையும் அதே வேகத்தில் மறைமுகமாக சாடுகிறார் கமல்ஹாசன். பாஜக மீதும் மோடி மீதும் கமல் மென்மையாக இருக்கிறார், பாஜகவின் பீ டீமாக செயல்படுகிறார் என்கிற எதிர்க்கட்சிகளின் விமர்சத்திற்கான பதிலாகவும் இந்த வீடியோ இருப்பதாக கூறப்படுகிறது.