எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் விஸ்வரூபம் படத்திற்கு பிரச்னை வந்திருக்காது - கமல்ஹாசன்

Jon
in திரைப்படம்Report this article
எம்.ஜி.ஆர். இருந்திருந்தால் தனது விஸ்வரூபம் படத்திற்கு பிரச்னை வந்திருக்காது, என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி, சென்னை ராமாபுரம் எம்.ஜி.ஆர். தோட்டத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். பின்னர் நடைபெற்ற விழாவில், "காலத்தை வென்றவன்" என்ற தலைப்பில் எம்.ஜி.ஆர் குறித்த ஆவணப்படம் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேசன் மற்றும் மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், திராவிடம் ஏன் உங்கள் கட்சி பெயரில் இல்லை என்ற கேள்விக்கு, பரமக்குடி, ராமநாதபுரம் என சேர்த்துக்கொண்டே போனால் கட்சி பெயர் பெரிதாகிவிடும் என்பதால் சேர்க்கவில்லை என்றார்.
மேலும், தமிழகத்தில் இருக்கும் அனைவரும் தமிழ் பேசும் திராவிடர்கள் தான், என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.