'நல்லரசை கொடுப்பதற்கான அதிகாரம் வேண்டும்'- கமல் ஹாசன்
மக்குளுக்கான நல்லரசைக் கொடுப்பதற்கான அதிகாரத்தைப் பெறுவதே குறிக்கோள் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணமுடையவர்கள் யார் வேண்டுமானாலும் தங்களுடன் கை கோர்க்கலாம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் .
கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன், அங்குள்ள தனியார் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 'மக்கள் பணியில் அனுபவமுள்ளவர்கள் தங்களுடன் இணைவதாகவும், நல்ல அரசை கொடுப்பதற்கான அதிகாரம் வேண்டும் என்பதே குறிக்கோள் எனவும் கூறினார்.
மேலும் நல்லது செய்யும் நோக்கத்தோடு இருப்பவர்கள் யாராக இருந்தாலும் எங்களுடன் கை கோர்த்துக் கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார்.