தமது கட்சி ஆட்சிக்கு வரும்போது வீட்டுக்கு ஒரு கணினி அளிக்கப்படும்- கமல்ஹாசன்
kamal-political-india-tamilnadu
By Jon
தமது கட்சி ஆட்சிக்கு வரும்போது தமிழகத்தில் வீட்டிற்கு ஒரு கணினி வழங்கப்படும் என கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், காட்பாடி, அணைகட்டு போன்ற பகுதிகளில் வேன்மூலம் பிரச்சாரம் மேற்க்கொண்டார்.
காட்பாடியில் கொட்டும் மழையிலும் நனைந்தபடி இருந்த மக்கள் மத்தியில் கமலஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் அண்ணா சாலையில் உள்ள மண்டபத்தில் பேசிய கமல் ஹாசன் தெரிவித்ததாவது, மக்கள் நீதி மய்யத்தின் வளர்ச்சியை பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் கூட இப்போது வியந்துபோய் பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.
மேலும் நமது கட்சி ஆட்சிக்கு வரும்போது தமிழகதில் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு கணினி வழங்கப்படும் என தெரிவித்தார்.