விக்ரம் படத்தில் பார்வையில்லாதவராக நடிக்கின்றாரா கமல்?

Vikram Kamal blind man
By Irumporai Jul 16, 2021 11:38 AM GMT
Report

விக்ரம் படத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் பார்வயைற்றவராக நடிக்க இருப்பதாக தகவ் வெளியாகியுள்ளது.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் விக்ரம். உலக நாயகன் கமல் ஹாசன் தயாரித்து, ஹீரோவாக நடிக்கும் விக்ரம் படத்தின் படபிட்டிப்பு இன்று துவங்கியுள்ளது.

[

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இந்த நிலையில் விகரம் படத்தில் கமலின் கதாபாத்திரம் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, விக்ரம் படத்தில் கண் பார்வையற்றவராக நடிக்கிறாராம் கமல். பாதி படம் வரை பார்வை இருக்குமாம், மீதி பாதியில் பார்வை இருக்காது என கூறப்படுகிறது.

ஏற்கனவே கமல்ஹாசன் 1981ம் ஆண்டு வெளியான ராஜபார்வை படத்தில் பார்வையற்றவராக நடித்திருந்தார்.

மேலும்  கமலுக்கு வில்லனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி. மேலும் தன் அபார நடிப்பால் மிரட்டும் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலும் விக்ரம் படத்தில் நடிப்பதால்  படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது