வாரி வழங்கிய கமல் சந்தோஷ மழையில் கூட்டணி கட்சிகள்
தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 6 ஆம் தேதி நடக்கவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் 15ம் தேதி தொடங்குகின்றது. தேர்தல் நெருங்குவதால் அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு பணியில்தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றன. இந்த நிலையில் திமுக, அதிமுகவுக்கு எதிராக மூன்றாவது அணியாக இருப்பதாக கூறப்படும் மக்கள் நீதி மய்யமும் தொகுதி பங்கீட்டில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்த தேர்தலில்மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணியில் இருக்கும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகளும், இந்திய ஜனநாயக கட்சிக்கு 40 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி 154 இடங்களில் போட்டியிடவிருப்பதாக அறிவித்து தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளது.
திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் தேசிய கட்சியான காங்கிரஸுக்கே அதிகபட்சமாக 25 தொகுதிகள் தான் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் சமத்துவ மக்கள் கட்சிக்கும், இந்திய ஜனநாயக கட்சிக்கும் அதிக இடம் கிடைத்துள்ளது. இதனால் கட்சி தலைவர்களான சரத்குமாரும், பாரிவேந்தரும் மகிழ்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.