கமல் ஹாசன் பிரசாரத்திற்கு போன போது காரை கல்லால் தாக்கிய மர்ம நபர்
மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல் ஹாசன் அவர்களை பிரச்சாரத்தின் போது மர்ம நபர் ஒருவர் தாக்க முற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையிலான கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
இந்நிலையில், காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். கமல்ஹாசனின் கார் காந்தி சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மர்ம நபர் காரை தாக்க முற்பட்டுள்ளார். இதில் முன்பக்க கார் கண்ணாடி உடைந்தது.
இதனை கண்ட கட்சி தொண்டர்கள் அந்த மர்ம நபரை தாக்கினர். இதனால் காயமடைந்த அந்த நபர் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.