கமலால் கதறி அழுத ரசிகர்கள் ... வைரலாகும் வீடியோவால் திரையுலகினர் அதிர்ச்சி

Kamal Haasan Vijay Sethupathi Anirudh Ravichander Lokesh Kanagaraj Vikram Movie
By Petchi Avudaiappan May 24, 2022 09:55 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

நடிகர் கமல்ஹாசன் தனது ரசிகர்களை சர்ப்ரைஸாக சந்தித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில், நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் விக்ரம். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில்  சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கமல் ரசிகர்களை அழைத்து அவர்களிடம் கமல்ஹாசன் குறித்தும், அவருடைய படங்கள் மற்றும் 'விக்ரம்' குறித்தும் பேச சொல்கின்றனர். அப்போது திடீரென சர்ப்ரைஸாக பின்பக்கத்தில் இருந்து கமல்ஹாசன் ரசிகர்கள் முன் தோன்றி இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அப்போது ரசிகர்கள் அவரை பார்த்ததும் உணர்ச்சி பெருக்கில் கண்ணீர் சிந்துகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.