கமல்ஹாசன் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம்

kamal party light
By Jon Jan 16, 2021 06:17 AM GMT
Report

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த டார்ச் லைட் சின்னம் இந்த முறை வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து கமல்ஹாசன் தரப்பு மேல்முறையீடு செய்தது. அதனைத் தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் கட்சிக்கே டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச பாடுபட்ட மார்டின் லூதர் கிங் பிறந்தநாளன்று இது நிகழ்ந்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், எம்மோடு துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஒளி பரவட்டும்” என்றுள்ளார்.

முன்னதாக புதுச்சேரியில் மட்டும் மக்கள் நீதி மய்யத்திற்கு 'டார்ச் லைட்' சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தங்கள் கட்சிக்கு பேட்டரி 'டார்ச் லைட்' சின்னத்தை ஒதுக்கக்கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.