‘இதுபோன்ற முட்டாள் தனமான காட்சிகளை தென்னிந்திய ரசிகர்கள் தான் ரசிப்பார்கள்’ - பிரபல நடிகர் சர்ச்சை கருத்து
தெலுங்கு திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனராக கருதப்படும் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கியிருக்கும் பான் இந்திய திரைப்படம் தான் ஆர்.ஆர்.ஆர்.
தெலுங்கு சூப்பர்ஸ்டார்களான ராம் சரண், ஜுனியர் என்.டி.ஆர், பாலிவுட்டில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜய் தேவ்கன், ஆலியா பட் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இந்த படம் நேற்று பிரம்மாண்டமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
முதல் நாள் முடிவிலேயே உலக அளவில் ரூ. 200 கோடி வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது ஆர்.ஆர்.ஆர்.
இந்நிலையில் பாலிவுட் படங்கள் எது வந்தாலும் மோசமாக விமர்சனம் செய்யும் கமல்கான் தற்போது ஆர்.ஆர்.ஆர் படம் குறித்து விமரசனம் செய்துள்ளார்.
“என்.டி.ஆர்- ராம் சரணை தோளில் தூக்கி வைத்துக்கொள்ள, அவர் துப்பாக்கி வைத்திருக்கும் 1000 நபர்களுடன் சண்டை போடுகிறார்.
JrNTR put Ramcharan on his shoulder and then they both fight with 1000 gunmen for next 15 minutes. Are you serious @ssrajamouli Ji? Such stupid scenes can be liked by brainless South audiences only. #RRR
— KRK (@kamaalrkhan) March 26, 2022
இவ்வளவு முட்டாள் தனமான காட்சிகளை தென்னிந்திய ரசிகர்களால் மட்டுமே ரசிக்க முடியும்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவரின் இந்த பதிவு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது