‘கமல் மாதிரி மோசமானவரை நான் பார்த்ததே இல்லை’ - தாடி பாலாஜி மனைவி ஆவேசம்
நடிகர் கமல்ஹாசனை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் தாடி பாலாஜியின் மனைவியான நித்யா கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரபல சின்னத்திரை நடிகர் தாடி பாலாஜி பல திரைப்படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து ரசிகர்களிடத்தில் புகழ் பெற்றார்.கடந்த சில ஆண்டுகளாக விஜய் டிவியில் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வரும் அவர் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும், தற்போது ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.
இதே சீசன் 2 நிகழ்ச்சியில் அவரது மனைவியான நித்யாவும் சக போட்டியாளராக கலந்துக் கொண்டனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்திருந்த நிலையில் அவர்களை சேர்த்து வைக்கும் நோக்கத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இதனை செய்திருந்தனர். ஆனால் அவர்களுக்குள் எந்த சமாதானமும் ஏற்படவில்லை. இருவரும் பிரிந்துதான் வாழ்ந்து வரும் நிலையில் பாலாஜி மனைவி நித்யாவுடன் வசிக்கும் தனது மகளை தன்னிடம் மீட்டுத் தரும்படி குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் மனு அளித்திருந்தார்.
இதற்கு கருத்து தெரிவித்த நித்யா, தாம் இவ்வழக்கை நீதிமன்றத்தில் சந்தித்துக் கொள்கிறேன் என கூறினார். அப்போது கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனியாக அறிவுரை வழங்கியுள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவரை போன்று ஒரு வொர்ஸ்ட் கேரக்டரை என் வாழ்க்கையில் நான் பார்த்ததேயில்லை என்றும், அவரை பற்றி பேச விட்டுவிடாதீர்கள். அவர் பற்றி என்னிடம் நிறைய கன்டென்ட் உள்ளது எனவும் நித்யா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.