விஜய்யுடன் இணைந்து நடிக்க தயார்... கால்ஷீட் கிடைக்குமா என கமல் கேள்வி...
நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிப்பீர்களா? என பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நடிகர் கமல்ஹாசன் சூப்பரான பதில் ஒன்றை அளித்துள்ளார்.
‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனை வைத்து 'விக்ரம்' படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சூர்யா, விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், ஷான்வி ஸ்ரீவஸ்தவா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Wow......#Thalapathy ???#VikramFromJune3 #VikramHitlist #VikramInAction #Vikram #KamalHaasan pic.twitter.com/VNlMdDzaqf
— Thalapathy 66 (@ramya_mathu) May 30, 2022
அனிருத் இசையமைத்துள்ள இந்தப்படம் ஜூன் 3 ஆம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான இந்தப்படத்தின் டீசர் , கிளிம்ப்ஸ் காட்சிகள், ட்ரெய்லர் ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே படத்தின் ப்ரோமோஷன்கள் நடைபெற்றும் வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக மலேசியாவில் நடைபெற உள்ள ப்ரொமோஷனில் கமல்ஹாசன் பங்கேற்றார். அப்போது அவரிடம் விக்ரம் படத்தின் 3 ஆம் பாகத்தில் நடிகர் விஜய்யை எதிர்பார்க்கலாமா என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு விக்ரம் 3 படத்துக்காக சூர்யாவை ஒப்பந்தம் செய்துள்ளதை மறைமுகமாக குறிப்பிட்டு விஜய் ஒப்புக்கொண்டால் ராஜ்கமல் நிறுவனத்தின் படத்தில் இடம் பெறுவார் எனவும் தெரிவித்தார்.
அதேபோல் விஜய்யுடன் இணைந்து நடிப்பீர்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு, “விஜய் ஐயா கால்ஷீட் கிடைத்தால் தானும் இணைந்து நடிக்க தயார்” என்று கமல்ஹாசன் பொது மேடையில் ஓப்பனாக கூறியுள்ளார். இதனால் இரு தரப்பு ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.