கமலுடன் காதல்; 3 முறை கருக்கலைப்பு - ஸ்ரீவித்யாவை கல்யாணம் பண்னாத காரணமே இதுதான்!
கமல் - ஸ்ரீவித்யா காதல் குறித்த பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
கமல் - ஸ்ரீவித்யா
தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீவித்யா. கமல்ஹாசனுடன் அபூர்வ ராகங்கள் படத்தில் நடித்தார். அதன்பின், இருவரும் காதலித்து வந்தனர்.
ஆனால், ஸ்ரீவித்யாவின் அம்மாவுடைய அறிவுரைப்படி இரண்டு பேருமே பிரிந்துவிட்டனர். இந்த விவகாரம் தான் கடந்த ஒரு வாரமாக வைரலாக பேசப்பட்டு வருகிறது. அதனையடுத்து, ஸ்ரீவித்யா ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
காதல் விவகாரம்
ஆனால் அந்த வாழ்க்கை சரியாக அமையவில்லை. அதனையடுத்து விவாகரத்து பெற்றுக்கொண்டு தனியாக வாழ்ந்து வந்தார். தொடர்ந்து, உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கேரளாவில் உயிரிழந்தார். இந்நிலையில், ஸ்ரீவித்யா அண்ணி அவரை குறித்த பல தகவல்களை பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
அதில், திருமண வாழ்க்கையில் ஸ்ரீவித்யா கர்ப்பம் ஆனார். ஆனால் குழந்தை பெற்றால் நடிக்க முடியாது என்பதால் அவரது கணவர் ஜார்ஜின் தூண்டுதல்பேரில் கருவை கலைத்துவிட்டார். ஸ்ரீவித்யாவை ஜார்ஜ் ஒரு பணம் தரும் மெஷினாகவே பார்த்தார். ஒரு சமயம் ஸ்ரீவித்யாவின் ஹேர் டிசைனர் வந்து ஸ்ரீவித்யாவின் அண்ணனிடம், என்ன அந்தப் பொண்ணை அப்படி விட்டுட்டீங்க.
கை நிறைய தூக்க மாத்திரைகளை வைத்துக்கொண்டு சாகப்போகிறேன் என்று சொல்லிக்கொண்டே இருப்பதாக சொன்னார். உடனே வேக வேகமாக ஸ்ரீவித்யாவின் வீட்டுக்கு அவரது தாய் சென்றிருக்கிறார். ஆனால் தாயையும், மகளையும் உள்ளே வைத்து பூட்டிவிட்டு ஜார்ஜ் சென்றுவிட்டார்.
அருகில் இருந்தவர்களின் உதவியால் அங்கிருந்து இரண்டு பேரும் வெளியேறினார்கள். ஸ்ரீவித்யா கிறிஸ்டியனாக மாறியதால் விவாகரத்தும் பெற முடியாமல்; வேறு ஒரு திருமணமும் செய்யாமல் பத்து வருடங்கள் போராடினார். ஒருவழியாக விவாகரத்து பெற்று தனிமையிலேயே இருந்து தனது உயிரை விட்டார்" எனத் தெரிவித்துள்ளார்.
You May Like This Video