கமலின் உடல்நிலை குறித்து ,ராமச்சந்திர மருத்துவமனை அறிக்கை
தமிழ் திரையுலகின் முன்னனி நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் சில தினங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றுவிட்டு சென்னை திரும்பியிருந்தார்.
இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை தொடர்ந்து மருத்துவமனையில் தனிமை படுத்திக்கொண்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தெரிவித்திருந்தார் கமல். அன்று மாலையே அவரது உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை சார்பில் இருந்து அறிக்கை ஒன்று வெளியிடபட்டிருந்தது.
கடந்த நான்கு நாட்களாக மருத்துவ கண்காணிப்பில் இருந்துவரும் கமல் ஹாசனின் உடல் நிலை குறித்த தற்போதைய தகவலை ஸ்ரீ ராமச்சந்திர மருத்துவமனை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதன்படி நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான கமலின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
