ராகுல் காந்தியுடன் யாத்திரையில் கமல்ஹாசன் - மாறுமா அரசியல் களம்!
ராகுல் காந்தியின் நடைபயணத்தில் மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கிறார்.
பாரத் ஜோடோ யாத்திரை
ராகுல்காந்தியுடன் பாரத் ஜோடோ யாத்திரை 100 நாட்களை தாண்டி நடைபெற்று வருகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிலையில் சென்னை அண்ணா நகரில் உள்ள ஹோட்டலில் மக்கள் நீதி மய்யம் மாநில நிர்வாக குழு செயற்குழு மற்றும்

மாவட்ட செயலாளருடன் மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை ஈடுபட்டார். தொடர்ந்து, துணைத்தலைவர் மவுரியா நிருபர்களிடம் கூறுகையில், 'ராகுல் காந்தி விடுத்த கோரிக்கையை ஏற்று, டெல்லியில் வருகிற 24-ந் தேதி அவரது தேசிய ஒற்றுமை நடைப்பயணத்தில் கமல்ஹாசன் பங்கேற்கிறார்.
கமல்ஹாசன் பங்கேற்பு
அவருடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர்' என்றார். அதனையடுத்து கமல்ஹாசன் தெரிவிக்கையில், பல முக்கிய முடிவுகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டன. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து எதுவும் விவாதிக்கவில்லை.
ஆனால் நான் எந்த திசையை நோக்கி பயணிக்கிறேன் என்பது உங்களுக்கு விரைவில் புரியும். என் பயணத்தை புரிந்துகொண்டாலே அது உங்களுக்கு தெரிந்துவிடும் எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது இவர் யாத்திரையில் கலந்துக் கொள்வது அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.