‘’ இவங்க கிட்ட யூகமும் இருக்கு , யுக்தியும் இருக்கு ’’ : மீண்டும் பிக்பாஸுக்கு வந்த கமல்

biggboss kamalhassan
By Irumporai Dec 04, 2021 11:01 AM GMT
Report

அமெரிக்காவிற்கு சென்று திரும்பிய கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த பரிசோதனையில், அவருக்கு லேசான கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், முழுமையாக குணமடைந்து இன்று மருத்துவமனையில் இருந்து திரும்பியிருக்கிறார்.

மருத்துவமனையில் கிடைத்த நேரத்தை புத்தக வாசிப்பு, நண்பர்களுடன் பேசுதல் உள்ளிட்டவற்றில் செலவிட்டுள்ளார். கொரோனா தொற்றால் கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்த போது நடிகை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் திரும்பிய நிலையில் ஓய்வு கூட எடுக்காமல், வீட்டிலிருந்து பிக் பாஸ் செட்டிற்கு சென்று இருக்கிறார். தற்போது அவர் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

அதில் பேசும் கமல், “ உங்கள் அன்பினால் மட்டுமே மீண்ட நான், இன்று உங்களுடன் மீண்டும் நான், இனி என்றுமே உங்களின் நான், இந்த சீசனில் வெளியிருந்து நான் பார்க்கும் போது, இம்முறை எல்லோரும் தனித்தனியே விளையாடுகிறார்கள்.

அவர்களுக்கு யூகமும், யுக்தியும் திட்டமும் இருக்கிறது. அதன் விளைவுகளை இன்று இரவு பார்ப்போம்.” என அதில் பேசியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.