தமிழே.. பேச வேண்டிய விஷயம் நிறைய இருக்கு; ஆனால்.. கமல்ஹாசன் ஓபன் டாக்

Kamal Haasan Tamil Cinema Thug Life
By Sumathi Jun 04, 2025 12:30 PM GMT
Report

கமல்ஹாசன் தமிழ்நாட்டிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தக் லைஃப்

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தக் லைஃப்'. நாளை படம் (ஜூன் 5) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

kamal hassan

இந்நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். இதில் கலந்துக்கொண்டு பேசிய கமல்ஹாசன், " இந்தப் படத்தில் பணிப்புரிந்தவர்கள் எல்லோரும் ஏற்கனவே நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டு வந்தவர்கள்தான். படை வீரர்கள் நிறைந்த படை இது.

”தமிழ்நாடு வாழ்க”.. 5 மொழிகளில் போட்ட போஸ்ட் - கமல்ஹாசன் திட்டவட்டம்

”தமிழ்நாடு வாழ்க”.. 5 மொழிகளில் போட்ட போஸ்ட் - கமல்ஹாசன் திட்டவட்டம்

கமல்ஹாசன் பேட்டி

நிறைய டெக்னீஷியன்ஸ் இந்தப் படத்தில் பணிப்புரிந்திருக்கிறார்கள். மணி சாருடன் பணிப்புரிந்தது எனக்கு குதுகலமாக இருந்தது. எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டுக்கே நன்றி சொல்ல வேண்டும். உயிரே உறவே தமிழே என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்.

thug life

பேச வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. அது 'தக் லைஃப்' பற்றியது அல்ல. அதனைப் பிறகு பேசுவோம். அதற்கான நேரத்தை ஒதுக்கி தருவது என்னுடைய கடமை ஒரு தமிழனாக” என்று தெரிவித்துள்ளார்.