உங்கள் ஆதரவு மட்டும் இருந்தால் போதும் தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றி காட்டுவேன்- கமல்ஹாசன்
மக்களின் ஆசி இருந்தால் தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றி காட்டுவேன் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 3-வது கட்ட பிரசாரத்தை திருச்சியில் தொடங்கி நேற்று இரவு விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் முடித்தார். அருப்புக்கோட்டை தனியார் மண்டபத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தியபோது கமல் ஹாசன் தெரிவித்தாவது, புகழ் என்பது எனக்கு புதிதல்ல.
உங்கள் தயவால் நான் அதனை எனது 5 வயது முதலே அனுபவித்து வருகிறேன். உங்களது ஆசீர்வாதம் மட்டும் இருந்தால் தமிழ்நாட்டின் தலையெழுத்தை நிச்சயம் மாற்றி காட்டுவேன்.
டுவேன்.
தமிழன் தலை நிமிர வேண்டும், நெஞ்சை நிமிர்த்தி ஓட்டு போட வேண்டும். நிறைய பேச வேண்டும் என்று இருக்கிறது. செயலில் இறங்கி காட்டுவோம் என்று கூறினார்.