கமல் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அடுத்த “சர்ப்ரைஸ்”...!
நடிகர் கமல்ஹாசன் தான் நடிக்கும் விக்ரம் படத்தில் பாடல் ஒன்றை எழுதியுள்ளார்.
மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை தனது ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக கமல் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், விக்ரம் படத்திற்காக கமல்ஹாசன் ஒரு குத்துப்பாடலை எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. "பத்தல பத்தல" எனத் தொடங்கும் அந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். கமல்ஹாசனே அந்த பாடலை பாடியுள்ளதாகவும், சாண்டி மாஸ்டர் நடன இயக்குனராக பணிபுரிந்து உள்ளதாவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த பாடலை கமலஹாசனின் பிறந்த நாளான நவம்பர் 7ந் தேதி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் விக்ரம் படக்குழு வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.