கமல்ஹாசன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? அவரே சொன்ன தகவல்

Kamal Haasan Makkal Needhi Maiam
By Sumathi Jun 07, 2025 05:00 AM GMT
Report

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன்

தமிழகத்தில் காலியாகவுள்ள 6 ராஜ்யசபா பதவியிடங்களுக்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி ராஜ்யசபா தேர்தல் ஜூன் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் திமுக சார்பாக 4 பேரை தேர்வு செய்ய முடியும்.

kamal hassan

அதிமுக சார்பாக 2 பேரை தேர்வு செய்ய முடியும். அந்த வகையில் திமுக சார்பாக வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, திமுக நிர்வாகி சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். அதிமுக சார்பாக வழக்கறிஞர் இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, கமல்ஹாசன் உள்ளிட்ட 6 வேட்பாளர்கள் பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்த மனுவில் சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது. நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் புரசைவாக்கம் சர் எம் சிடி. முத்தையா செட்டியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளதாக வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவுடனா..? தவெகவுடன் கூட்டணியா? உறுதி செய்த விஜய பிரபாகரன்

திமுகவுடனா..? தவெகவுடன் கூட்டணியா? உறுதி செய்த விஜய பிரபாகரன்

சொத்து மதிப்பு

2023-24-ஆம் நிதியாண்டில் ரூ.78.90 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.59.69 கோடி. ஒட்டுமொத்த அசையா சொத்துகளின் இப்போதைய சந்தை மதிப்பு ரூ.245.86 கோடி. கடனாக ரூ.49.67 கோடி உள்ளது.

கமல்ஹாசன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? அவரே சொன்ன தகவல் | Kamal Haasans Net Worth Information

ஆழ்வார்பேட்டை, உத்தண்டி, சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் மொத்தம் நான்கு வணிகக் கட்டிடங்கள். இவற்றின் மொத்த சந்தை மதிப்பு ரூ.111.1 கோடி. திண்டுக்கல்லில் உள்ள வில்பட்டி கிராமத்தில் ரூ.22.24 கோடி மதிப்புள்ள விவசாய நிலம். கையிருப்பில் உள்ள ரொக்கம் ரூ.2.60 லட்சம். மகேந்திரா பொலிரோ, மெர்சிடஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, லக்சஸ் ஆகிய நான்கு கார்கள் உள்ளன.

இவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.8.43 கோடி. மொத்த சொத்து மதிப்பு 305.55 கோடி ரூபாய் எனக் குறிப்பிட்டுள்ளார். இவரது வருமானம் 2019-2020 ஆம் ஆண்டில் ரூ.22.1 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ.78.9 கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.