கமல்ஹாசன் ஒரு நாளும் ஆட்சிக்கு வரப்போவதில்லை - சவுக்குசங்கர் பரபரப்பு பேச்சு..!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஊழல் நடப்பது தெரிந்தும் அமைதியாக இருப்பதாக அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் மொய் பொருள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்,திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் அவர்கள் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியில் அனைத்தையும் நிறைவேற்றினார்களா என நெறியாளர் லியோ கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்து பேசிய சவுக்கு சங்கர்,நிறைவேற்றவே முடியாத சில வாக்குறுதிகளை அவர்கள் தேர்தல் அறிக்கையில் கொடுத்ததாக தெரிவித்தார்.
தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
அந்த குழுவில் மூத்த திமுக அரசியல்வாதிகள் இடம் பெற்றிருந்தனர்.ஆனால் தேர்தல் அறிக்கையை அவரே தனிச்சையாக தயார் செய்துவிட்டதாகவும்,அறிக்கை முழுமை பெற்ற பின்னர் அது வெளியிடும் போது தான் அது குறித்து குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்களுக்கு தெரிவிப்பார் என்றார்.
பின்னர் பேசிய அவர் கமல்ஹாசன் இல்லத்தரசிகளுக்கு 10 ஆயிரம் கொடுப்பார்,ஒரு லட்சமும் கொடுப்பார் ஆனால் ஒரு நாளும் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்றார்.
மேலும் அவர்,மாதம் மாதம் இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மாதம் 2000 ஆயிரம் கோடி தேவை.
இந்த தொகையில் பள்ளிக்கல்வித்துறையின் பட்ஜெட்டை போடலாம். நீங்க வீட்டில் சீரியல் பார்த்து கொண்டு சும்மா உட்காருவதற்கு உங்களுக்கு மாதம் மாதம் ஆயிரம் ரூபாயா?
என்ன அறிவிப்பு இதெல்லாம்..வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு அவர்கள் புருஷன் கொடுக்கட்டும் சார்..நீங்க எதுக்கு கொடுக்குறீங்க சார்..என்றார்.