பெரியாரை பின்பற்றும் கமல்ஹாசன் ஒரு முட்டாள்: ஹெச்.ராஜா சர்ச்சை கருத்து
பெரியாரை பின்பற்றுவதாக கூறும் கமல்ஹாசன் ஒரு முட்டாள் என ஹெச்.ராஜா பேசியுள்ளது சர்ச்சை கிளப்பியிருக்கிறது.
மதுரை மாவட்டத்தின் செக்காணூரணியில் மலிவு விலை மருந்தகம் திறப்பு விழாவில் பாஜக தேசிய செயலாளரான ஹெச்.ராஜாக கலந்து கொண்டார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை, எனவே மற்ற மாநிலங்களுக்கு தேவைப்படும் போது கொடுத்து உதவலாம் அல்லவா? என தெரிவித்தார்.
மேலும், நடிப்பில் மட்டுமே கமல் விஷயம் பெரிதாய் தெரியும், பெரியாரை பின்பற்றுவதால் கமல் முட்டாள், கண்டெய்னர், மொபைல் டாய்லெட் என எதைக் கண்டாலும் பயப்படுகிறார் என்றால் இவர் எல்லாம் உலக நாயகனா? என கேள்வி எழுப்பினார்.
ஸ்டாலின் முட்டாள் என தெரியும், அதைப் போல பெரியாரை பின்பற்றுவதாக கூறும் கமலும் முட்டாள்தான். இன்றைக்கு முட்டாள்கள் உலகமாக தமிழ்நாடு மாற்றப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இனப்படுகொலையாளி மகிந்தவின் மேடையில் அர்ச்சுனா! நாமலுக்கு ஒத்துழைப்பு என்ற கருத்தோடு வழங்கிய விளக்கம் IBC Tamil
SLS சான்றிதழ் இல்லாமல் நீட்டிப்புக் கம்பிகளை விற்பனை செய்த நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அபராதம் IBC Tamil