திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்த கமல்ஹாசன்
DMK
Kamal
Stalin
Makkal Needhi Maiam
By mohanelango
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த 2-ம் தேதி வெளியாகியிருந்தன. திமுக தனிப் பெரும்பான்மை உடன் வென்று ஆட்சி அமைக்கிறது.
இந்தத் தேர்தலில் திமுக - அதிமுக கூட்டணி தவிர்த்து மற்ற கூட்டணிகள் ஒரு இடங்களில் கூட வெல்ல முடியவில்லை.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் மிகக் கடுமையான போட்டிக்குப் பிறகு 2000-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசனிடம் தோற்றார்.

இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இன்று சென்னையில் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது உதயநிதி ஸ்டாலினும் உடன் இருந்தார்.