கமல்ஹாசன் கூட்டணியில் மதிமுக இடம்பெறுகிறதா? வைகோ பதில்
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் செல்ல உள்ளதாக என்று கேட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விளக்கம் கொடுத்திருக்கிறார். திமுக கூட்டணியில் மதிமுக இடம் பெற்றிருக்கிறது. ஆனால், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் இரு கட்சிகளும் ஈடுபட்டு வருகிறது.
இருப்பினும் இரு கட்சிகளுக்கு இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருவதாக தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. மதிமுகவுக்கு 5 தொகுதிகள் மட்டுமே தருவதற்கு திமுக முன்வந்திருக்கிறது.
இதனால் மதிமுக கடும் அதிருப்தியில் உள்ளது. இந்நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூன்றாவது அணியில் மதிமுக இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் இதுகுறித்து வைகோ விளக்கம் கொடுத்திருக்கிறார்.

இது குறித்து அவர் பேசுகையில், கமல்ஹாசன் தலைமையிலான மூன்றாவது அணிக்கு மதிமுக செல்ல வாய்ப்பு கிடையாது. திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டவுடன் இது குறித்த தகவல்கள் முழுமையாக தெரிவிக்கப்படும் என்றார்.