ராகுல் ஜி கவலைவேண்டாம் நான் உங்க கூட இருக்கேன் : கமல்ஹாசன்

Nationalist Congress Party Rahul Gandhi
By Irumporai Mar 24, 2023 02:43 AM GMT
Report

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, கடினமான நேரங்களில் அவருடன் நிற்பதாக கமல்ஹாசன் ட்வீட்  செய்துள்ளார்.

ராகுலுக்கு சிறை

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, மோடி குடும்பப்பெயர் குறித்து அவதூறாக பேசியதாக புர்னேஷ் மோடி என்பவர் தொடர்ந்த வழக்கில் சூரத் நீதிமன்றம், ராகுலை குற்றவாளியாக அறிவித்துள்ளதோடு, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ராகுல் ஜி கவலைவேண்டாம் நான் உங்க கூட இருக்கேன் : கமல்ஹாசன் | Kamal Haasan Tweets Standing With Rahul Gandhi

கமல் ஆதரவு

இந்த நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், ராகுல் காந்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்வீட்டில், ராகுல்ஜி, இந்த கடினமான நேரத்தில் நான் உங்களுடன் நிற்கிறேன் நீங்கள் அதிக சோதனை நேரங்களையும் நியாயமற்ற தருணங்களையும் பார்த்திருக்கிறீர்கள்.

நமது நீதித்துறை அமைப்பு நீதி வழங்குவதில் உள்ள விதிமீறல்களை சரிசெய்யும் அளவுக்கு வலுவானது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மீதான உங்கள் மேல்முறையீட்டில் உங்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்! சத்யமேவ ஜெயதே!! என்று தனது ட்வீட்டில் பதிவு செய்துள்ளார்.