வாக்கு எண்ணும் மைங்களுக்கு திடீரென விசிட் செய்த கமல்ஹாசன் !
அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் நேற்றுடன் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடந்த வாக்குப்பதிவில் 71.79 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் தேர்தலில் வாக்கு பதிவு செய்ய வரவில்லை.
அதுமட்டுமல்லாமல், வெளியூர்களில் வசிக்கும் பலர் வாக்களிக்க வில்லை. இதனால், வாக்குப்பதிவு குறைவாக இருந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. வாக்குப்பதிவு முடிந்த பின்னர், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அந்தந்த தொகுதிக்குட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.
வாக்கு எண்ணும் மையங்கள் அருகே தீவிர கண்காணிப்பில் ஈடுபடுமாறு எதிர்கட்சித் தலைவர்கள் அவரவர் கட்சியினருக்கு அறிவுறுத்தியிருக்கிறார்கள். அதனையடுத்து, அனைத்து தொண்டர்களும் வாக்கு எண்ணும் மையங்கள் அருகே முகாமிட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் கல்லூரிகளில் திடீரென ஆய்வு செய்தார்.
தேர்தல் நடந்து கொண்டிருந்த போதே கோவை தெற்கு தொகுதியில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக கமல்ஹாசன் நேற்று புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.