துப்பாக்கி 2ம் பாகத்தில் விஜய்க்குப் பதில் கமல்ஹாசன்?
'துப்பாக்கி' படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய்க்குப் பதிலாக கமல்ஹாசன் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது.
விஜய் நடிப்பில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 2012-ம் ஆண்டு வெளியான துப்பாக்கி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்தது.
அதை தொடர்ந்து துப்பாக்கி படத்தின்2 பாகம் உருவாகுமா என்ற கேள்வியும் எழுந்தது. இந்த நிலையில் ஏஆர் முருகதாஸ் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக உறுதியளித்தார்.
தற்போது விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அவரது 65-வது படத்தில் நடித்து வருகிறார். முதலில் தளபதி 65 படத்தை ஏஆர் முருகதாஸ் தான் இயக்குவதாக இருந்தாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் முருகதாஸுக்கு ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக முருகதாஸ் படத்திலிருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது ஏஆர் முருகதாஸ் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கத் உள்ளதாகவும். அதில் விஜய்க்கு பதில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. விரைவில்உண்மை நிலவரம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.