ரஜினிக்கு ஓகே-னா நான் தயார்... கமல்ஹாசன் ஓபன் டாக்!
நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க நான் தயார் எனவும் ஆனால் ரஜினியிடம் கேட்க வேண்டும் எனவும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
விக்ரம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம். இப்படம் விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்துள்ளது.
இதையடுத்து விக்ரம் படக்குழு இப்படத்தின் வெற்றியை பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர். நடிகர் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம்
ரஜினியுடன் நடிக்க தயார்
உலக அளவில் 100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை ரூ.5 கோடியை தாண்டிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்க தயாரா என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த கமல்ஹாசன் ரஜினியுடன் இணைந்து நடிக்க நான் தயார். அதற்கு முன்னதாக லோகேஷ் கனகராஜிடமும் ரஜினியிடமும் கேட்க வேண்டும் என பதிலளித்தார்.